திங்கள், 31 ஜூலை, 2017

மனிதனின் முடிவுகள்


நான் ஒரு சிறு கதை கூறுகிறேன். இது சீனாவில் லாவோட்சு வாழ்ந்த காலங்களில் நிகழ்ந்தது. இந்த கதையை லாவேட்சு மிகவும் விரும்பினார். லாவேட்சுவை பின்பற்றியவர்கள் பல தலைமுறையாக இந்த கதையை திரும்ப திரும்ப கூறி வந்தனர். இந்த கதையில் மேலும் மேலும் அதிக அர்த்தத்தை அவர்கள் உணர்ந்தனர். இந்த கதை தொடர்ந்து வந்தது. இது ஒரு வாழும் உண்மையென மாறி விட்டது.
கதை மிகவும் எளிமையானது. ஒரு கிராமத்தில் வயதான ஏழை ஒருவன் இருந்தான். ஆனால் அரசர்களே பொறாமை கொள்ளுமளவு அழகான வெண் குதிரை ஒன்று அவனிடம் இருந்தது. யாரும் அப்படிப்பட்ட அழகான, வலிமை பொருந்திய, அம்சமான. கம்பீரமான குதிரையை அதற்குமுன் பார்த்திருக்க முடியாது. அரசன் அந்த குதிரையை என்ன விலை கொடுத்தாவது வாங்க தயாராக இருந்தான். ஆனால் அந்த மனிதன், “இந்த குதிரை என்னை பொருத்தவரை வெறும் குதிரையல்ல, என் குடும்பத்தில் ஒருவன். நான் எப்படி மனிதர்களை விற்கமுடியும்? அவன் ஒரு நண்பன். அவன் ஒரு உடமையல்ல, உன்னால் நண்பனை விற்க முடியுமா? அது சாத்தியமில்லை.” என்று கூறி விட்டான். அவன் மிகவும் ஏழை, எல்லா வழியிலும் சபலம் வர வாய்ப்பிருந்தது. ஆனால் அவன் அந்த குதிரையை விற்கவில்லை. 
ஒருநாள் காலை லாயத்தில் குதிரை இல்லை என்பதை அவன் கண்டான். முழு கிராமமும் ஒன்று திரண்டு, “நீ ஒரு முட்டாள் கிழவன். இப்படி நடக்குமென்று – என்றாவது ஒருநாள் யாராவது குதிரையை திருடி விடுவார்கள் என – எங்களுக்கு முன்பே தெரியும். நீயோ மிகவும் ஏழை – இப்படிப் பட்ட அரிதான ஒன்றை உன்னால் எப்படி பாதுகாக்க முடியும்? இதற்கு பதிலாக அதை நீ முன்பே விற்றிருக்கலாம். நீ என்ன விலை கேட்கிறாயோ அந்த விலைக்கு விற்றிருக்கலாம். நினைத்து பார்க்க முடியாத விலை கிடைத்திருக்கும். இப்போது குதிரை போய்விட்டது. உனக்கு இது ஒரு கெட்டநேரம், இது ஒரு சாபம்” என்றனர்.
அந்த கிழவன், “அதிகம் பேச வேண்டாம் – குதிரை லாயத்தில் இல்லை என்று மட்டும் கூறுங்கள். இதுதான் உண்மை மற்ற அனைத்தும் அனுமானங்களே. இது அதிர்ஷ்டமா இல்லையா என்பது யாருக்கு தெரியும்? எப்படி உங்களால் முடிவு செய்ய முடியும்?” என்றான்.
மக்கள், “எங்களை முட்டாளாக்காதே. நாங்கள் சிறந்த தத்துவவாதிகளல்ல, ஆனால் இதற்குத் தத்துவம் எதுவும் தேவையில்லை. அரிதான ஒன்று காணாமல் போய்விட்டது. அது கெட்டநேரம் என்பது மிக சாதாரண உண்மை.” என்றனர்.
அந்த கிழவன், “லாயம் காலியாக உள்ளது, குதிரை போய்விட்டது என்பது உண்மை என நானும் ஒத்துக்கொள்கிறேன். மற்றபடி எதுவும் எனக்குத் தெரியாது – அது கெட்டநேரமா நல்லநேரமா – ஏனெனில் இது நிகழ்வின் ஒரு பகுதியே. இதை தொடர்ந்து என்ன நடக்குமென்பது யாருக்கு தெரியும்?” என்றான்.
மக்கள் சிரித்தனர். கிழவனுக்கு புத்தி பிசகிவிட்டதென அவர்கள் நினைத்தனர். அவன் எப்போதும் கொஞ்சம் கிறுக்கனாகவே இருப்பான். அது எல்லோருக்கும் தெரியும். இல்லாவிடில் இந்த குதிரையை நல்ல விலைக்கு விற்று பணக்காரனாகி இருக்கலாம். ஆனால் அவன் விறகுவெட்டியாகவே வாழ்ந்துவந்தான். அவனுக்கும் மிக வயதாகிவிட்டது. இருப்பினும் காட்டுக்கு சென்று மரங்களை வெட்டி கொண்டுவந்து விற்றுக் கொண்டிருந்தான். அவன் சம்பாதிப்பது கைக்கும் வாய்க்குமே போதவில்லை. அவன் வறுமையிலும் வேதனையிலும் வாடிக் கொண்டிருந்தான். இப்போது அவன் ஒரு கிறுக்கன் என்பது மிகவும் ஊர்ஜிதமாகிவிட்டது. 
பதினைந்து நாட்களுக்கு பிறகு, திடீரென ஒரு இரவில் அந்த குதிரை திரும்பி வந்துவிட்டது. இது திருடப்பட வில்லை. அது காட்டுக்கு தப்பி ஓடிவிட்டது. இப்போது தான் மட்டுமின்றி அது தன்னுடன் கூட தன் இனத்தைச் சேர்ந்த ஒரு டஜன் குதிரைகளையும் கூட்டிக் கொண்டு திரும்பி வந்துள்ளது. திரும்பவும் கிராமத்து மக்கள் திரண்டு வந்து,“அந்த கிழவனிடம், பெரியவரே, நீங்கள் சொன்னது சரிதான், நாங்கள் கூறியது தவறாகிவிட்டது. அது கெட்டநேரமல்ல. அது நல்லநேரம்தான் என்பது நிருபணமாகிவிட்டது. நாங்கள் வலியுறுத்தி கூறியதற்காக மன்னித்துக் கொள்ளுங்கள்.” என்றனர்.
அந்த கிழவன், “மறுபடியும் நீங்கள் அதிகமாக யோசிக்கிறீர்கள். அந்த குதிரை திரும்ப வந்துவிட்டது என்றும் அதனுடன் இன்னும் பனிரெண்டு குதிரைகள் வந்துள்ளன என்று மட்டும் கூறுங்கள்.- ஆனால் தீர்மானிக்காதீர்கள். இது ஆசீர்வாதமா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது. இது ஒரு நிகழ்வின் ஒரு பகுதியே. முழு கதையும் தெரியாமல் எப்படி உங்களால் முடிவு செய்ய முடிகிறது? ஒரே ஒரு பக்கத்தை படித்துவிட்டு முழு புத்தகத்தையும் எப்படி விமர்சனம் செய்ய முடியும்? ஒரு பக்கத்தில் ஒரே ஒரு வரியை படித்துவிட்டு எப்படி அந்த பக்கத்தை பற்றி பேச முடியும்? ஒரே ஒரு எழுத்தை மட்டும் பார்த்துவிட்டு எப்படி அந்த வரியை பற்றி கூற முடியும்? நமது கையில் அந்த எழுத்து அளவு கூட இல்லை, வாழ்வு மிகப் பெரியது – எழுத்தின் பகுதிதான் இருக்கிறது. நீங்கள் முழு வாழ்வையும் பற்றி முடிவெடுக்கிறீர்கள். இது ஒரு ஆசீர்வாதம் எனக் கூற வேண்டாம், யாருக்கும் தெரியாது. முடிவெடுக்காமல் இருப்பதே எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அதனால் என்னை தொந்தரவு செய்யாதீர்கள்.” என்றார். 
இந்த முறை மக்கள் எதுவும் கூறவில்லை. அந்த பெரியவர் சொல்வது சரியாக இருக்கலாம். அதனால் அவர்கள் மெளனமாக இருந்துவிட்டனர், ஆனால் உள்ளே இவன் கூறுவது தவறு என நினைத்துக் கொண்டனர். பனிரெண்டு குதிரைகள் அந்த குதிரையுடன் வந்திருக்கின்றன. சிறிதளவு பயிற்சி கொடுத்தால் போதும் அவைகளை விற்று ஏகப்பட்ட பணம் சம்பாதிக்கலாம் என நினைத்தனர். 
அந்த பெரியவருக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். அவன் இளஞன். இவன் அந்த குதிரைகளுக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பித்தான். ஒரு வாரத்திற்க்குள் ஒரு குதிரை மேலிருந்து விழுந்து அவனது கால் எலும்பு முறிந்துவிட்டது. மக்கள் திரும்பவும் கூடி – மக்கள் எப்போதும் எங்கும் ஒரே மாதிரிதான், உங்களைப் போலவே தான் – தீர்மானித்தனர். அவர்களின் முடிவு மிக எளிதாக வந்துவிடக் கூடியது. அவர்கள், “நீங்கள் கூறியது சரிதான். மறுபடியும் நீங்கள் சொல்வதுதான் சரி என நிருபணமாகியிருக்கிறது. இது ஒரு வரப்பிரசாதமல்ல, இது ஒரு கெட்டகாலம்தான். உனது ஒரே மகன் தனது கால்களை இழந்துவிட்டான். உன்னுடைய வயதான காலத்தில் அவன்தான் உனக்கு ஒரே ஆதரவு. இப்போது நீ மிகவும் கஷ்டப் படப் போகிறாய்.” என்றனர்.
அந்த வயதானவன், “நீங்கள் முடிவெடுப்பதற்க்கு மிகவும் ஆவலாக உள்ளீர்கள். வெகுதூரம் நினைப்பை ஓடவிட வேண்டாம். எனது மகன் தனது கால்களை ஒடித்துக் கொண்டான். என மட்டும் கூறுங்கள். இது ஒரு சாபமா வரமா என யாருக்குத் தெரியும்?– யாருக்கும் தெரியாது. மறுபடியும் இது நிகழ்வின் ஒரு பகுதியே, முழுமையாக கொடுக்கப்படவில்லை. வாழ்க்கை பகுதிகளாகத்தான் நிகழ்கிறது, முடிவு முழுமையை ஒட்டித்தான் எடுக்க முடியும்.” என்றான்.
இது நிகழ்ந்து சில வாரங்களுக்குப் பின் இந்த நாடு பக்கத்து நாட்டுடன் சண்டையிட சென்றது. நகரத்தின் அனைத்து வாலிபர்களும் படைக்கு வலுக்கட்டையமாக அழைத்து செல்லப்பட்டனர். அந்த பெரியவரின் மகன் மட்டும் விட்டுவைக்கப் பட்டான். ஏனெனில் அவன் முடமானவன். மக்கள் எல்லோரும் அழுது அரற்றினர். ஏனெனில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் இளைஞர்கள் வலுக்கட்டாயமாக கூட்டிச் செல்லப் பட்டனர். அவர்கள் திரும்பி வருவதற்க்கான சாத்தியக் கூறே இல்லை, ஏனெனில் அவர்கள் சண்டையிடப் போகும் நாடு மிகப் பெரியது. இந்த சண்டை தோல்வியுறப் போகும் சண்டைதான். அவர்கள் திரும்பி வரப் போவது இல்லை. அந்த நகரம் முழுவதும் அழுது கொண்டும், அரற்றிக் கொண்டும் விம்மிக் கொண்டும் இருந்தது.  அவர்கள் அந்த வயதானவனிடம் வந்து, “நீங்கள் சொன்னது சரியே பெரியவரே! கடவுளுக்குத்தான் தெரியும்! நீங்கள் கூறியது மிகவும் சரிதான் – இது வரம்தான் என்பது நிருபணமாகிவிட்டது. உனது மகன் முடமாகி இருக்கலாம், ஆயினும் அவன் உன்னுடன் இருப்பான். எங்களது மகன்கள் ஒரேயடியாக போகப் போகிறார்கள். குறைந்தபட்சம் இவன் உயிருடன் உன்னோடு இருப்பான், மெது மெதுவாக நடக்கக் கூட ஆரம்பிக்கலாம், சிறிதளவு நொண்டி நடப்பானாக இருக்கலாம், ஆனாலும் அவன் சரியாகி விடுவான்.” என்றனர். 
அந்த வயதானவன், “உங்களுடன் பேசவே முடியாது. நீங்கள் மேன்மேலும் கற்பனை செய்துகொண்டே போகிறீர்கள். – முடிவெடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள். யாருக்கும் தெரியாது உங்களது மகன்கள் வலுக்கட்டாயமாக படைக்கு போர்முனைக்கு இழுத்துச் செல்லப் படுகிறார்கள்., என்னுடைய மகன் இழுத்துச் செல்ல பட வில்லை என்பதை மட்டும் கூறுங்கள். இது வரமா சாபமா என்பது யாருக்கும் தெரியாது. யாராலும் தெரிந்து கொள்ளவும் முடியாது. கடவுளே அறிவார்.” என்றார்.
நாம் கடவுளே அறிவார் எனக் கூறுவதன் அர்த்தம் முழுமைக்கு மட்டுமே தெரியும் என்பதுதான். முடிவெடுக்காதே, முடிவெடுத்தால், தீர்மானித்தால், ஒருபோதும் உன்னால் முழுமையுடன் ஒருங்கிணைய முடியாது. நிகழ்வின் பகுதிகளால் கவரப்பட்டு விடுவீர்கள். சிறிய விஷயங்களின் மூலம் முடிவெடுக்கவும் தீர்மானிக்கவும் ஆரம்பித்து விடுவீர்கள்.

...ஓஷோ வின் "UNTILL YOU DIE Che # 2"இல் இருந்து.




இராசி பலன், ஜூலை 31


இராசி  நட்சத்திரம்  பலன் 
மேஷம் 
அசுவினி
பரணி
கார்த்திகை 1
பிறருடைய விஷயங்களில் தலையிடக்கூடாது அமைதியாக இருக்கவும் 
எடுத்தகாரியங்களில் வெற்றிநிச்சயம் 
தொழில் பயிற்சிகளில் தெளிவும், உறவினர் உதவியும் கிடைக்கும்
ரிஷபம் 
கார்த்திகை 2,3,4
ரோகிணி 
மிருகசீரிடம் 1,2
எதிரிகள் பணிவர்.நண்பர்களால் நலன் உண்டாகும்  
 ஆரோக்கியம் கூடும். பயண சுகம். விரும்பியது கிடைக்கும்   
எல்லா நலன்களும் உண்டாகும் 
மிதுனம் 
மிருகசீரிடம் 3,4
திருவாதிரை 
புனர்பூசம் 1,2,3
புத்திக்கலக்கம் கவலைகள் ஏற்படும் 
தனப்புழக்கம் இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் 
பொறுமையுடன் தங்கள் பணியில் ஈடுபடவும் 
கடகம் 
புனர்பூசம் 4
பூசம் 
ஆயில்யம்
புதிய செயல்கள் தடைபடும் 
தாயாருக்கு வைத்தியசெலவு, வாகனசெலவு உண்டாகும்  
பங்குதாரர்கள் விஷயத்தில் கவனம் 
சிம்மம் 
மகம் 
பூரம் 
உத்திரம் 1
சகோதர நன்மை சத்ருஜெயம் உண்டாகும். தெய்வவழிபாடு செய்யவும். மனக்குழப்பம் தீரும் 
 மகிழ்ச்சி தன்னம்பிக்கை கூடும். வெற்றிநிச்சயம்  
 புதிய நண்பர்கள் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும்  
கன்னி 
உத்திரம் 2,3,4
அஸ்தம்  
சித்திரை 1,2
வீண்பயம் மகிழ்ச்சிகுறையும் 
உணவு விஷயத்தில் கவனம் தேவை 
குடும்ப நிம்மதிக்குறைவு, மனக்கஷ்டம் ஏற்படும் 
துலாம் 
சித்திரை 3,4
சுவாதி 
விசாகம் 1,2,3

உடல் ஆரோக்கியம் மனதிருப்தி பாக்யவிருத்தி கிடைக்கும் 
நண்பர்களால் பயணவழி நன்மை உண்டாகும் 
தன்னுடைய பணிகளில் ஆராய்ச்சியும் தேர்ச்சியும் ஏற்படும் 
விருச்சிகம் 
விசாகம் 4
அனுசம் 
கேட்டை 

பெரியோர்களின் தொடர்பு பணவரவு வாக்கு வன்மை உண்டாகும் 
ஆத்மநண்பர்களின் உதவி, பணவரவு, குடும்பசுகம் அமையும் 
 பெண்களால் பணவிரயம். ஆடம்பரச்செலவு  ஏற்படும்     
தனுசு 
மூலம் 
பூராடம் 
உத்திராடம் 1
நோய்நீங்கி சுகம் அடைவீர்கள் தெய்வநம்பிக்கையுடன் இருங்கள்   
போஜனசுகம் சந்தோஷம் நிலவும் 
பிறர்க்குஉபகாரம் செய்வீர்கள். அதனால் மகிழ்ச்சி அடைவீர்கள்   
மகரம் 
உத்திராடம் 2,3,4
திருவோணம் 
அவிட்டம் 1,2
முக்கியஸ்தர்களின் உதவி. தேகதிடம் புத்திதெளிவு உண்டாகும்  
முன்னேற்றமான வாய்ப்புகள் நல்ல திருப்பங்கள் அமையும் 
மரியாதை அந்தஸ்து உயரும்.
புதியமுயற்சி வேண்டாம்  
கும்பம் 
அவிட்டம் 3,4
சதயம் 
பூரட்டாதி 1,2,3
 தெய்வ கைங்கரியம், உல்லாசப்பயணம் ஏற்படும் 
தனசம்பத்தும், வாக்குபலிதமும், குடும்பசுகம் ஏற்படும் 
மன அமைதியுடன் தெய்வத்தை வழிபடவும்
மீனம் 
பூரட்டாதி 4
உத்திரட்டாதி 
ரேவதி 
எல்லாவகையிலும் நன்மை உண்டாகும்  
உடல் நலத்தில் கவனம். வம்புவழக்கில் தலையிடவேண்டாம் 
நண்பர்களால் கஷ்டங்களில் இருந்து விடுதலை கிடைக்கும்   


நலம் பெரும் நட்சத்திரக்காரர்கள் :  பூரம்,  அஸ்தம், சுவாதி 

விழிப்புடன் இருக்கவேண்டிய நட்சத்திரக்காரர்கள் : மகம் 

சந்திராஷ்டமம் : ரேவதி, அசுவினி  

சூலம் : கிழக்கு 


ஞாயிறு, 30 ஜூலை, 2017

நட்சத்திர விவரங்கள்


நட்சத்திரம் பெயர் வைக்க வேண்டிய எழுத்துக்கள் அதிதேவதை மந்திரம் திருக்கோயில் விபரம்
அசுவினி சு-சே-சோ-ல சரஸ்வதி ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே விரிஞ்சி பத்ந்யை ச தீமஹி! தந்நோ வாணி ப்ரசோதயாத்!!   அருள்மிகு சரஸ்வதி திருக்கோயில், கூத்தனூர், திருவாரூர்
தொலைபேசி:
+91-4366-273 050, 238445,
99762 15220
பரணி லி-லு-லே-லோ துர்க்கை ஓம் காத்யாயனாய வித்மஹே கன்யகுமாரீய தீமஹி! தந்நோ துர்க்கி ப்ரசோதயாத்!!   அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில், பட்டீஸ்வரம், தஞ்சாவூர்
தொலைபேசி:
+91-435 241 6976
கார்த்திகை அ-இ-உ-எ அக்னி, முருகன் ஓம் மஹாஜ்வாலாய வித்மஹே அக்னிமக்னாய தீமஹி! தந்நோ அக்னி ப்ரசோதயாத்!!
அருள்மிகு திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் திருக்கோயில், திருச்செந்தூர், தூத்துக்குடி
தொலைபேசி:
+91-4639 242 221
ரோகிணி ஒ-வ-வி-வு பிரம்மா வேதாத்மநாய வித்மஹே ஹிரண்ய கர்ப்பாய தீமஹி! தந்நோ பிரம்ம ப்ரசோதயாத்!! அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், திருவானைக்காவல், திருச்சி
தொலைபேசி:
+91-431 2230 257
மிருகசீரிடம் வே-வோ-கா-கி சந்திரன் ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி! தந்நோ ஸோம ப்ரசோதயாத்!! அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர் திருக்கோயில், தாழமங்கை, தஞ்சாவூர்-பாபநாசம் சாலை
திருவாதிரை கு-க-ஞ-ச ருத்திரன் ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி!
தந்நோ ருத்ர ப்ரசோதயாத்!!
தில்லை அருள்மிகு நடராசர் திருக்கோயில், சிதம்பரம்
புனர்பூசம் கே-கோ-ஹ-ஹி அதிதி ஓம் தஸரதாய வித்மஹே சீதாவல்லபாய தீமஹி! தந்நோ ராம: ப்ரசோதயாத்!! அருள்மிகு காந்திமதி சமேத நெல்லையப்பர் திருக்கோயில், திருநெல்வேலி
பூசம் ஹூ-ஹே-ஹோ-ட குரு ஓம் பராவரசாய வித்மஹே குருவ்யக்தாய தீமஹி! தந்நோ குரு ப்ரசோதயாத்!! அருள்மிகு கோமுக்தீஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம்-மயிலாடுதுறை சாலை, திருவாவடுதுறை
ஆயில்யம் டி-டு-டே-டோ ஆதிசேசன் ஓம் ஸர்ப்பராஜாய வித்மஹே சுக்லபாதாய  தீமஹி!
தந்நோ அனந்த ப்ரசோதயாத்!!
அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், திருமயிலை, சென்னை
மகம் ம-மி-மு-மெ சுக்கிரன் பிதா: பிண்டஹஸ்தாஸ் ச க்ருஸா: பவித்ரிண: !
குசலம் தத்யு: அஸ்மாகம் மகா நக்ஷத்திர தேவதா:!!   
அருள்மிகு வடஆரண்யேசுவரர் திருக்கோயில், கும்பகோணம்-மயிலாடுதுறை சாலை
பூரம் மோ-ட-டி-டு பார்வதி ஸம்பூஜயாமி அர்யமாணம் பல்குனி தார தேவதாம்! தூம்ரவர்ணம் ரதாரூடம் ஸஸக்திகர சோயினம்!!  அருள்மிகு கங்காதீஸ்வரர் திருக்கோயில், புரசைவாக்கம், சென்னை
உத்திரம் டே-டோ-ப-பி சூரியன் ஓம் மஹாலக்ஷ்ம்யை ச வித்மஹே விஷ்ணுபத்ந்யை ச தீமஹி!தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்!! அருள்மிகு கரவீரநாதர் திருக்கோயில், வடக்கண்டம் (கரவீரம்), திருவாரூர்-கும்பகோணம் சாலை.
அஸ்தம் பூ-ஷ-ந-ட சவிதா ஓம் ஆதித்யாய வித்மஹே மார்த்தாண்டாய தீமஹி! தந்நோ சூர்ய ப்ரசோதயாத்!! அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேற்காடு, சென்னை
சித்திரை பே-போ-ர-ரி துவஷ்டா (மஹாவிஷ்ணு அம்சம்) ஓம் சுதர்சனாய வித்மஹே மகா ஜ்வாலாய தீமஹி! தந்நச் சக்ர ப்ரசோதயாத்!!  அருள்மிகு மணிகண்டேஸ்வரர் திருக்கோயில், திருமால்பூர், காஞ்சிபுரம்-அரக்கோணம் சாலை
சுவாதி ரு-ரே-ரோ-த வாயு ஓம் வஜ்ரநகாய வித்மஹே தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி! தந்நோ நரசிம்ஹ ப்ரசோதயாத்!! அருள்மிகு
கற்பக விநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி, சிவகங்கை மாவட்டம்
விசாகம் தி-து-தே-தோ முருகன் ஓம் தத்புருஷாய வித்மஹே தீமஹி!
தந்நோ ஷண்முக: ப்ரசோதயாத்!! 
அருள்மிகு கஜேந்திரவரத பெருமாள் திருக்கோயில், நத்தம், திருச்சி மாவட்டம் - லால்குடி அருகில்
அனுசம் ந-நி-நு-நே லட்சுமி அருள்மிகு லோகநாத பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணங்குடி, திருவாரூர் மாவட்டம்
கேட்டை நோ-ய-இ-யு இந்திரன் அருள்மிகு தாருகாவனேஸ்வரர் திருக்கோயில், திருப்பராய்த்துறை, திருச்சி-கரூர் பாதை
மூலம் யே-யோ-ப-பி அரக்கன் அருள்மிகு சௌந்தராஜப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்
பூராடம் பூ-த-ப-டா வருணன் அருள்மிகு மஹாகாளேஸ்வரர் திருக்கோயில், இரும்பைமாகாளம், திண்டிவனம்-புதுச்சேரி நெடுஞ்சாலை
உத்திராடம் பே-போ-ஜ-ஜி விநாயகர் அருள்மிகு திருக்குற்றாலநாதர் திருக்கோயில், திருக்குற்றாலம்
திருவோணம் ஜு-ஜே-ஜோ-கா விஷ்ணு அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், திருமுல்லைவாயில், ஆவடி
அவிட்டம் க-கீ-கு-கூ அஷ்டவசுக்கள் அருள்மிகு பாதாளஈஸ்வரர் திருக்கோயில், அரித்துவாரமங்கலம், தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை
சதயம் கோ-ஸ-ஸீ-ஸூ யமன் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மதுரை
பூரட்டாதி ஸே-ஸோ-தா-தீ குபேரன் அருள்மிகு கோளிலிநாதர் திருக்கோயில், திருக்குவளை, தஞ்சை
உத்திரட்டாதி து-ஞ-ச-ஸ்ரீ காமதேனு அருள்மிகு ஆதிவைத்தியநாதர் திருக்கோயில், வைத்தீஸ்வரன் கோயில்
ரேவதி தே-தோ-ச-சி சனீஸ்வரன் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்கோடு

முகப்பு

உ 
ஓம் சிவசிவ ஓம் 
ஓம் சாய் ராம் 


*********************************************************************************


ஓம் கங் கணபதயே நம 

வணக்கம்,

                             வருங்கால நிலை அறிய உதவும் தெய்வீகக்கலை ஜோதிடக்கலையாகும். விண்ணில் சுற்றிக்கொண்டிருக்கும் கோள்கள் இவ்வுலகிலுள்ள அனைத்து உயிர்களின் மீதும் செலுத்தும் ஆதிக்கத்தையும், அதனால் ஏற்படும் சுப -அசுப பலன்களையும், மந்திரத்தால் நாம் அடையும் பலன்களையும், பிராணாயாமம், அஷ்டமாசக்திகள், பஞ்சபூதங்கள், நட்சத்திர அதிதேவதை வழிபாடுகள், எண்கள், நட்சத்திரங்கள், கிரகங்களைவைத்து அதிர்ஷ்டபெயர்கள் வைப்பது, ஜோதிட, ஆன்மீக சம்பந்தமான விபரங்களை எனது குருமார்கள் எனக்கு அருளியதை தங்களுடன் பகிர்ந்துகொள்வதில் 
மகிழ்ச்சி !


இராசி பலன், ஜூலை 30


இராசி  நட்சத்திரம்  பலன் 
மேஷம் 
அசுவினி
பரணி
கார்த்திகை 1
உறவினர் உதவி கிடைக்கும் 
சுகம், பலவழிகளில் பணம் வரவாகும் 
அரசாங்க லாபம் அடைவர் 
ரிஷபம் 
கார்த்திகை 2,3,4
ரோகிணி 
மிருகசீரிடம் 1,2
எடுத்த காரியங்கள் கைகூடும் 
எதிரிகள் பணிவர். நன்மைகளுண்டாகும்  
தனப்பிராப்திக்கிட்டும் 
மிதுனம் 
மிருகசீரிடம் 3,4
திருவாதிரை 
புனர்பூசம் 1,2,3
சகோதரர்களால் கவலை உண்டாகும் 
தன்னுடைய வேலையைத்தவிர பிறமுயற்சியில் ஈடுபடவேண்டாம் 
பிரியமான நண்பர்களுடன் சந்திப்பு ஏற்படும் 
கடகம் 
புனர்பூசம் 4
பூசம் 
ஆயில்யம்
வீண்செலவுகள் உண்டாகும் 
நண்பர்களால் உதவி கிடைக்கும் 
வாழ்க்கைத்துணையால் மற்றும்   நண்பர்களால் பிரச்சனை உண்டாகும் 
சிம்மம் 
மகம் 
பூரம் 
உத்திரம் 1
மனத்தெம்பும், மகிழ்ச்சியும் உண்டாகும் 
சகோதரநன்மை, தனலாபம் கிடைக்கும்  
பதவிஉயர்வு, வாகனசுகம் ஏற்படும்  
கன்னி 
உத்திரம் 2,3,4
அஸ்தம்  
சித்திரை 1,2
உடல் சோர்வுஉண்டாகும் 
வீண்பயம், வாக்குவாதம், கண்நோய் ஏற்படும் 
வாக்குபலிதம், மனதிருப்தி உண்டாகும் 
துலாம் 
சித்திரை 3,4
சுவாதி 
விசாகம் 1,2,3
பணவரவு, புத்தாடை,பயணம் ஏற்படும் 
சுயமுன்னேற்றத்தில் ஈடுபாடுஉண்டாகும்  
பெரியோர்நட்பு, பாக்கியம் உண்டாகும் 
விருச்சிகம் 
விசாகம் 4
அனுசம் 
கேட்டை 
நண்பர்களால் சுபவிரயம்  ஏற்படும் 
உடல் அசதி, சுபச்செலவுகள் உண்டாகும் 
நிம்மதி கெடும், வீண்செலவுஉண்டாகும்  
தனுசு 
மூலம் 
பூராடம் 
உத்திராடம் 1
தனலாபம், போஜனசுகமடைவார் 
கல்வியில் வெற்றி, பெண்களால் உதவிகிடைக்கும் 
சுகபோகவாழ்வு, மகிழ்ச்சி உண்டாகும் 
மகரம் 
உத்திராடம் 2,3,4
திருவோணம் 
அவிட்டம் 1,2
காரியவெற்றி, தன்னம்பிக்கை ஏற்படும் 
முக்கியபிரமுகர்களின் உதவியால் முன்னேற்றம் அடைவர் 
விருப்பம் நிறைவேறும்,புகழ் ஓங்கும் 
கும்பம் 
அவிட்டம் 3,4
சதயம் 
பூரட்டாதி 1,2,3
தைரியம்,பிரயாணம் உண்டாகும்  
வாழ்க்கையில் நல்லதிருப்பம் உண்டாகும் 
தெய்வநம்பிக்கை,சந்தோஷங்களுண்டாகும் 
மீனம் 
பூரட்டாதி 4
உத்திரட்டாதி 
ரேவதி 
தெய்வபக்தியுடன் இருக்கவேண்டும் 
வம்புவழக்குகளுக்கு செல்லாமல் அமைதியுடன் இருப்பதுநல்லது 
உடல்நலம் பாதிப்பு, வாழ்க்கைத்துணை மற்றும் நண்பர்களால் பிரச்னைஏற்படும் 


நலம் பெரும் நட்சத்திரக்காரர்கள் : மகம், உத்திரம், சித்திரை

விழிப்புடன் இருக்கவேண்டிய நட்சத்திரக்காரர்கள் : ஆயில்யம்

சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி, ரேவதி

சூலம் : மேற்கு